வள்ளலார் அருளிய மூலிகை அட்டவணை:
1. சீந்தில் - காயசித்தி
2. மருள் - விரணாரி
3. காஞ்சொறி - கபாரி
4. பெருங்காஞ்சொறியு மது
5. ஆடாதோடை - சுராரி
6. கருங்காலி - குஷ்டாரி
7. வெண் கருங்காலி - நாகமணி பந்தனி
8. வேம்பு - பித்தாரி
9. பெருவேம்பு - வாதாரி
10. நிலவேம்பு - சுராரி, சூதகநாசி, வாயுகாரி
11. சர்க்கரை வேம்பு - காயசித்தி
12. கோரைக்கிழங்கு - தோஷாரி
13. பற்பாடகம் - சக்ஷாப்தம்
14. வெட்டிவேர் - தாபாரி
15. விலாமிச்சம்வேர் - பித்தாரி
16. பேய்ப்புடல் - பித்தாரி
17. வட்டத்திரிப்பி - பேதி மர்த்தனி
18. குமிள் - சன்னி மர்த்தனி
19. பெருங்குமிழ் - சுர மர்த்தனி
20. கண்டங்கத்தரி - சுவாச மர்த்தனி
21. சிறுவழுதலை - சுவாசகாச மர்த்தனி
22. வழுதலை - சிலேட்டும மர்த்தனி
23. நெரிஞ்சில் - மூத்திரகிரிச்ச மர்த்தனி
24. வில்வம் - சத்தி மர்த்தனி
25. முன்னை - மேகமர்த்தனி
26. கழற்கொடி - விரைவாத மர்த்தனி
27. வெண்கழற் கொடி - குன்ம மர்த்தனி
28. கொட்டைக்கரந்தை - வாக்குதாரி
29. நாறுங்கரந்தை - காயசித்தி
30. நன்னாரி - தேகசித்தி
31. பேய்ப்பீர்க்கு - கெந்தகத்தைலம்
32. மற்றைப் பீர்க்கு - வாதசமனம்
33. பழுப்பாகல் - லிங்கபந்தனி
34. முள் வெள்ளரி - கிரிச்சாரி
35. நிலவுகாய் - சத்திறக்கி
36. வெண் கிலுகிலுப்பை - சூதபற்பி
37. கோவை - ஜலக் கழிச்சலாற்றி
38. தீங்கோவை - பரவிந்து பந்தனி
39. கொன்றை - கிருமி மர்த்தனி
40. எலிச்செவி - நீர்ச்சுருங்கி
41. சதுரக்கள்ளி - பாஷாண மைனி
42. சிவதை - விரோசனி
43. பிரசூதிகை - வாயுஹாரி
44. நாயுருவி - மந்தாரி , குன்மகாரி
45. மேற்படி லவணம் - சருவ வுபரச மர்த்தனி மேற்படி கட்டு, மேற்படி களங்கு
46. செஞ்சதுரக்கள்ளி - தங்க தாம்பரி
47. சாறடை - திமிர்வாத மர்த்தனி
48. மூக்குறட்டை - பீனிச மர்த்தனி
49. செம்முள்ளி - சிலேட்டும மர்த்தனி
50. சித்தாமுட்டி - சுர மர்த்தனி, சூத பந்தனி
51. பேராமுட்டி - சர்வ சுர மர்த்தனி
52. பாளை - சுளுக்குப் போக்கி
53. திருநாமப்பாலை - பித்தாரி
54. குட சப்பாலை - அதிசார மர்த்தனி
55. வெட்பாலை - அயவங்கி, சூத சிந்தூரி
56. பழப்பாலை - பித்தாரி
57. முதியார் கூந்தல் - காரீய பற்பி
58. வெள்ளையாமணக்கு - வாதம் போக்கி
59. செவ்வாமணக்கு - காதிலிங்க பந்தனி
60. மாதளை - அயமுருக்கி
61. கொம்மட்டி மாதளை - சத்தி போக்கி
62. விளா - பித்தம் போக்கி
63. குட்டிவிளா - தாக மடக்கி
64. சர்க்கரை - தாகம் போக்கி, மயக்கம் போக்கி
65. கரும்பு - கல்லடைப்புப் போக்கி
66. வெண்கரும்பு - க்ஷயம் போக்கி
67. அமுக்கிறா - க்ஷயம் போக்கி, வாயுபோக்கி, வங்க நாக சிந்தூரி
68. பிரமி - வீக்கம் போக்கி, விரோசனி, வாத மாற்றி
69. பூனைக்காஞ்சொறி - சிலேட்டும மர்த்தனி
70. பூனைக்காலிப் பருப்பு - தம்பனி, சுக்கில பந்தனி
71. சிறுபூனைக்காலி - நீரிறக்கி, நீரிளக்கி
72. மந்தாரை - பாஷாண மைனி
73. கொக்கிறகு - சாதிலிங்க மைனி
74. அழிஞ்சில் - விஷ மர்த்தனி
75. மேற்படி மூல தைலம் - விரோசனி, லிங்க பந்தனி
76. பாகல் - பாஷாண தோஷ மர்த்தனி
77. காட்டத்தி - கிராணி நீக்கி, கிரகிணி நீக்கி
78. சரளம் - தங்க நீற்றி
79. முள்முள்ளிக்கீரை - சர்வசரக்கு கட்டொடத்தி, தங்கச்சுன்னி
80. முசுமுசுக்கை - க்ஷயமர்த்தனி, பவழ பற்பி
81. புன்னை - கிரந்தி போக்கி
82. கீழாநெல்லி - காமாலை போக்கி, பித்தம் போக்கி
83. கருங்கொள் - உருக்கினமாதல்
84. கூகைநீறு - உஷ்ணம் போக்கி
85. தேற்று - சலமலினாரி
86. தகரை - மாந்தம் போக்கி
87. ஊமத்தை - சூதவெண்ணெ யிறுக்கி
88. சேவகனார் கிழங்கு - கடிகை போக்கி
89. கரிசாலை - பாண்டு மர்த்தனி, க்ஷய மர்த்தனி, வசீகரி
90. பொற்றலை - காயசித்தி, சிந்துராதி
91. எருக்கு - சன்னி போக்கி, க்ஷீரம்...ணம் போக்கி
92. வெள்ளெருக்கு - சாரங் கட்டி
93. மணத்தக்காளி - தணலாற்றி
94. கருந்தக்காளி - கெந்தி கட்டி
95. குன்றி மணி - காரங்கட்டி
96. பெருமுள்ளங்கி - கிரிச்சரம் போக்கி
97. சிறுமுள்ளங்கி - கெந்தி கட்டி
98. ஆற்றுமுள்ளங்கி - சிலேட்டுமம் போக்கி
99. சுவர் முள்ளங்கி - நாக பற்பி, உப்புக் கட்டி
100. முருங்கை - கண் விரணம் போக்கி
101. மேற்படி பூ - விந்து கட்டி, தாம்பர சுத்தி
102. மேற்படி மூலம் - கட்டுடாத்தி
103. மேற்படி பிசின் - விந்து கட்டி
104. மேற்படி பத்திரி - மலம் போக்கி
105. ஈர்க்கு - வாயு மர்த்தனி
106. மேற்படி வேர்ப்பட்டை - வங்க பற்பி
107. புனல்முருங்கை - நாகங்கட்டி
108. துளசி - தோஷம் போக்கி
109. கருந்துளசி - செந்தூரத் தாதி
110. நீர்த்திப்பிலி - சன்னி போக்கி
111. வெள்ளுள்ளி - வாதம் போக்கி, தேக வலுவி, மூலம் போக்கி
112. ஈருள்ளி - வேகம் போக்கி, பித்த நாசி, சீதளி.
113. நொச்சில் - கடுப்புப் போக்கி
114. மேற்படி மூல தைலம் - லிங்க பந்தனி
115. மேற்படி பத்திரி - நீர் மர்த்தனி
116. கருநொச்சி - கறப்பான் போக்கி, வங்க பற்பி
117. பேயன் வாழை - காயசித்தி
118. மேற்படி கிழங்கு - வழலை போக்கி
119. மேற்படி பூ - சிந்தூரத்தாதி, வசிகரி
120. மேற்படி பத்திரி - உபரச பந்தனி
121. மேற்படி தண்டு - சர்வவிஷநாசி
122. மேற்படி பனி - உபரசாதி பவுதிக பந்தனி
123. மேற்படி லவணம் - சர்வபவுதிக பந்தனி
124. மேற்படி பழம் - ஜீரணகாரி, மலம் போக்கி
125. மேற்படி காய் - குற்றம் போக்கி
126. மேற்படி பூ - சுக்கில பந்தி, சுரோணித பந்தி, மல பந்தி
127. மேற்படி மூலம் - மதநாசி
128. இதர வாழைப்பூ - பெரும்பாடு போக்கி
129. வாழை - பெரும்பாடு போக்கி
130. வாழைக்கிழங்கு - உழலை போக்கி
131. மேற்படிகளின் மூல சலம் - சர்வ வுபசர பந்தனி
132. தென்னை - மரு€க்ஷ போக்கி
133. மேற்படி பூ - உபரச பந்தனி, மலபந்தனி சுரோணித பந்தனி உஷ்ண மர்த்தனி
134. மேற்படி கேரம் - காயசித்தி
135. மேற்படி பழம் - ஈடு முறித்தல், அறிவு விருத்தி
136. பனைக்கிழங்கு - வறுத்தி
137. பனை - வறுத்தி
138. மேற்படி பூ - கப நாசி
139. மேற்படி குருத்து - க்ஷயம் போக்கி
140. மேற்படி மூலரசம் - சூத பற்பி
141. மேற்படி கிழங்கு - வறுப்பில் பற்பி
142. நிலப்பனை - பாலையாம், க்ஷயம்போக்கி கரண ரோக மர்த்தனி
143. வெள்ளைக்காக்கணான் - விரோசனி, தங்கச் சுன்னி
144. முடக்கொத்தான் - வாதம் போக்கி
145. கசம்பை - தினவு, சுரம் போக்கி
146. சங்கங்குப்பி - குஷ்டம் போக்கி, கறப்பான் போக்கி
147. பொரும்பில் - விரணம் போக்கி
148. கறுப்பறுகு - காசம் போக்கி
149. வெள்ளறுகு - மேகம் நீக்கி, சுரம் போக்கி
150. பவளவறுகு - சுவாசம் போக்கி
151. புளியாரை - காயசித்தி, பித்த மர்த்தனி, லவண சிந்தூரி, அப்பிரேக சிந்தூரி
152. தாமரை - கண்குளிர்ச்சி
153. தாமரை வளையம் - நஞ்சு முறிச்சி
154. தாமரை மணி - வசிகரி
155. மேற்படி தாது - மேகம் போக்கி
156. மேற்படி கிழங்கு - ஆண்மை உண்டாக்கி, சூத பந்தனி
157. செங்கழுநீர் - திரிதோஷம் போக்கி, வசீகரி
158. அரக்காம்பல் - சிவேட்டுமம் போக்கி
159. கற்றாமரை - லோகச் செம்பி
160. வெண்டாமரை - சூத பந்தனி
161. குளிரி - உப்புக்கட்டி
162. மல்லிகை - எண்ணெய் போக்கி
163. கொடிமல்லிகை - தார பற்பி
164. ஆத்திமல்லிகை - மேனி அழகி
165. முல்லை - சோபந் தீரி
166. முல்லைப்பேதம் - முத்தோஷம் போக்கி
167. நந்தியாவட்டம் - கண்ணுக்காம்
168. இருவாட்சி - ரத்த பித்தம் போக்கி
169. செண்பகம் - மருக்கள் போக்கி, (பருக்கள் போக்கி)
170. சிறு செண்பகம் - பித்தம் போக்கி
171. செவ்வந்தி - சித்தப்பிரமை போக்கி
172. குங்குமவந்தி - கோழை போக்கி
173. எலுமிச்சை - பித்தம் போக்கி
174. சித்தீஞ்சில் - சிரதோஷம் போம்
175. பேரீஞ்சில் - சுரங்கள் போம்
176. முந்திரிப்பழம் - தோஷம் போக்கி
177. புளிமுந்திரி - திரிதோஷம் போக்கி
178. இலந்தை - கடுப்புப் போக்கி
179. இலுப்பை - விரணம் போக்கி
180. மலையிலுப்பை - வாதம் போக்கி
181. பலாசு - பேதி யாற்றி
182. முட்பலாசு - அரிதார நீறு
183. ஆலுக்கு - புழுக்கள் போம்
184. அரசுக்கு - புத்தி வர்த்தினி
185. இச்சில் - குஷ்டம் போக்கி
186. நாவல் - விரணம் போக்கி, வங்க பற்பி
187. அத்தி - பெரும்பாடு போக்கி, உஷ்ண சமனி
188. பேயத்தி - தம்பனை
189. பூவரசு - சகல விஷ குஷ்டம் போக்கி
190. அலரி - நடுக்கல் போக்கி
191. வன்னி - அயத் தாம்பரி, லவண சிந்தூரி
192. நீர்க்கடம்பு - நாக பந்தனம்
193. கடம்பு - பாஷாண பந்தனம்
194. வெண் கடம்பு - சூதபந்தனம்
195. வாகை - விரண நீக்கம்
196. கருவாகை - கெந்தி பந்தனம்
197. வேங்கை - கடி நீக்கம்
198. ஒட்டை - புதரி நீக்கம்
199. இலவு - அதிசார நீக்கம்
200. இலவம் பிசின் - சுக்கிலங் கட்டும்
201. மாமரம் - வாந்தி நிற்கும்
202. பொன்னாங்கண்ணி - கண்ணொளி, உஷ்ணசமனி
203. மாவிலிங்கை - சன்னி நீக்கம்
204. லோத்திரம் - கண்ணுக்கினிது
205. வெள்ளிலோத்திரம் - துரிசு குரு
206. வஞ்சிக்கு - இடுப்புறுதி
207. ஆற்று மருது - வழலை போக்கி
208. மாட்டுச் செவி மருது - வெள்வங்க பற்பி
209. குதிரைச் செவி மருது - கருவங்க பற்பி
210. இமிற் கிழங்கு - இகுளை நீக்கி
211. பாலிறில் - பாஷாணங்கட்டும்
212. தேட்கடை - சிரங்கு நீக்கி
213. நெய்ச்சிட்டி - சீதசுரம் போக்கி, குன்ம நாசி
214. சிறுவிடுகொள்ளு - தண்ர் கட்டு
215. பெருவிடு கொள்ளு - சாரநாசி
216. தண்ர் மிட்டான் - சிங்கி செம்பு
217. காகோளி - சலங்கணீக்கி
218. சீகக்ஷகாகோளி - திறமுண்டாக்கி
219. சீவகம் - கல்லுப்புக் கட்டு
220. மயிடவகம் - கெவுரிக் கட்டு
221. பேராமல்லி - சுரங்கள் போக்கி
222. சித்தாமல்லி - சலவை போக்கி
223. சிறுபுள்ளடி - கெணங்கள் போம்
224. அஷ்டிமதுகம் - பிரமியங்கள் போம்
225. பேர்சாரிபாதி - சூத பந்தனம்
226. பதுமுகம் - பாலையாம்
227. பிரபுணரிகம் - அப்பிரக சத்து
228. மேதை - மகாதோஷம் போம்
229. மாமேதை - துஷ்டசுரம் போம்
230. தேக்கு - சிரங்கு நீக்கி
231. ஞாழல் - தினவு போக்கி
232. பால்விழி - அய வங்கம்
233. பெருங்குறும்பை - பிறிவுக்காம்
234. குறுஞ்சூலி - அண்டமெழுகு
235. நறுமுருங்கை - நாகரச பந்தனம்
236. பெருங்குறிஞ்சி - கடுப்புப்போம்
237. ஆயில் - வாதம் போம்
238. புங்கு - சூலை போம்
239. மேற்படி பால் - ரண மாற்றி
240. வலம்புரி - குளிதோஷம் போம்
241. மருக்காரை - நசியத்துக்காம்
242. பாற்பை - சவ்வீரங் கட்டும்
243. இருள் - குடாரம் போக்கி
244. பாலிருள் - சூத பந்தனம்
245. இருள் வீடு - காந்த சத்து
246. களாவிழுது - வெடியுப்பு கட்டு
247. மராமரம் - சூடங் கட்டு
248. குமுகு - பற்குறுதி
249. தழுதாழை - வாதம் போக்கி
250. தெற்கை - கிரிச்சம் போக்கி, சுளுக்கு போக்கி
251. ஆதண்டை - பீனிசம் போக்கி, சிரநீர் போக்கி
252. குழலாதண்டை - சரக்கெல்லாம் கட்டும்
253. செவ்வாதண்டை - சூதவங்கி
254. நாணல் - துன் மாங்கிஷம் போக்கி
255. திமிசு - சாரங் கட்டு
256. பூசபத்திரி - வசீகரி
257. விடத்தேற்கு - சூதபற்பி
258. நெட்டி - நீரைக் கட்டும்
259. நளந்துவயம் - நாக செந்தூரி
260. பெருவாழை - ஈய செந்தூரி
261. உத்தாமணி - மாந்தம் போக்கி, பவள பற்பி, அயசிந்தூரி
262. பிராமுட்டி - சாரஞ் சாம்
263. குறிஞ்சி - மயிலிறகு சத்தாம்
264. தந்தசகுரி - இரும்புருக்கி
265. செப்பு நெருஞ்சில் - சிறுநீர் உஷ்ணம் போகும்
266. கணம்பு - சிலைமெழுகாம்
267. கல்புகு வெள்ளி - காயசித்தி
268. முளிகாக்கு - கல்லுப்புக் கட்டு
269. அசோகுக்கு - குன்மம் போகும்
270. வாலுகம் - கடிகள் போகும்
271. முத்தக்காசு - சுரதோஷம் போம்
272. அதிங்கு - கைகால் நோய் நீக்கம்
273. வெள்ள நாகணத்தி - விரோசனி
274. நேர்வாளம் - பேதி, பரநாசி
275. குறட்டை - கோழை பீனிஸம் போம்
276. கஞ்சாங்கோரை - குளிர் போம்
277. மருவகம் - தாகம் போம்
278. இங்குணம் - லிங்க மிறுகும்
279. இடுகாட்டுத் துளசி - இரைப்பு நீக்கி
280. திப்பிலி - தாது விருத்தி
281. சாசி - பாம்பு பக்ஷி கடி போக்கி
282. அனிச்சை - சொறி போக்கி
283. தாழை - சூத சுத்தி
284. குப்பை மேனி - உப்புக்கட்டு
285. செருப்படி - சிலேட்டுமம் போம், மேகம் போம்
286. ஆடுதின்னாப்பாளை - நாக பந்தனம், புழுக்கொல்லி
287. வெற்றிலை - நாகநீற்றி, ஜீர்ணகாரி, சூத சுத்தி
288. ஆகாசகருடன் - சூத பந்தனம், அண்ட வெண்கரு
289. ரத்தமண்டலி - இரும்புருக்கி, பூரங் கட்டி
290. காட்டாமணக்கு - அயலோக வங்கி
291. மருதணி - அயச்செம்பி, கெந்தி கட்டி
292. கஞ்சா - யோகி
293. நிலவாகை - புழுக்கள் போக்கி
294. கட்டுக்கொடி - உப்புக்கட்டு, சூதவெண்ணெய்க் கட்டு
295. புரண்டை - வைரநீற்றி, சூதவெண்ணெய் பந்தனி
296. வல்லாரை - உடலந்தேற்றி, காமநாசி
297. மயூரசிகை - நாக பந்தனம்
298. தாம்பரசிகை - சூத பந்தனம்
299. கானல்மா - பித்தளை நீறும்
300. தில்லை - பாஷாணஞ் சாம்
301. மலைமா - குடவ நீறும்
302. கப்பட்டி - குதிரைப் பல் மெழுகு
303. புளிச்ச சிறுக்கீரை - சூத பந்தனம், தாம்பர சிந்தூரி
304. நீரரளி - அயச் செம்பி
305. செவ்வறளி - தங்கச் செம்பி
306. சத்திச் சாரணை - காரீய பற்பி, வாத நாசி
307. தும்பை - சுரங்கள் போக்கி, சில் விஷம் போக்கி, சிரோரோகம் போக்கி
308. பேய்த்தும்பை - தோஷம் போக்கி
309. பேய்க்கொள்ளு - சகல சத்துமாம்
310. பேய்க்கடலை - கெந்தி தைலம்
311. பேய்த்துவரை - தாளக தைலம்
312. அழுகண்ணி - சூத பந்தனம்
313. தொழுகண்ணி - துணித்த சதை கூடும்
314. முடவாட்டுக்கால் - சவ்வீரங் கட்டும்
315. நாகசிங்கி - நாக பந்தனம்
316. இருப்பவல் - மாகட்டி
317. பொன்மத்தை - சூத பந்தனம்
318. கருமத்தை - கெந்தி பந்தனம்
319. நச்சுப் பூலா - செந்தூர குருவாம்
320. நான் முகப்புல் - ஈய பற்பி
321. காவட்டம்புல் - மந்தம் போக்கி
322. சுனைமரம் - சூத பந்தனம்
323. எருமைக்கனைச்சான் - தேகசித்தி
324. ரோமவிருட்சி - சகலசித்தி
325. செந்தாடுபாவை - தங்கச் செம்பு
326. முண்டிளி - சித்து
327. சாயாமரம் - மாவேதை
328. கருநெல்லி - சகலசித்தி
329. கல்லாரை - சூதங் கல்லாம்
330. கல்ச்செம்பு - சூத குரு
331. கல்லறளி - தங்கச் செம்பு
332. மூவிலைக்குருத்து - சூத மணி
333. முத்துருக்கன்செவி - சூத பந்தனி
334. செந்திராய் - சூதச் செம்பு
335. செம்பல்லி - சூதங் கட்டும்
336. செவ்வகத்தி - சாதிலிங்க மைனி
337. நிலச்சோதிக்கு - கண்டர் வெளுப்பு
338. நிலக்கடம்பு - அப்பிரகஞ் சத்து
339. பிறங்கைநாரிக்கு - கெவுரிக் கட்டு
340. பூதணக்கு - மால்தேவிக் கட்டு
341. செருந்தி - பாஷாணங் கட்டும்
342. கொத்தான் - பித்தம் போக்கி
343. வறச்சுண்டி - நீரைக் கட்டும்
344. ஆமிரம் - வெடியுப்புக் கட்டும்
345. கட்டுமா - தாபம் போக்கும்
346. அம்பளங்காய் - கல்லுப்புக் கட்டு
347. புனம்பிளி - சாரங் கட்டும்
348. இதளை - சூலை போம்
349. தும்பி - சூத பற்பி
350. சிறுதும்பி - சோகம் தீர்க்கும்
351. சோனகப்பூ - பாதரஸமாம்
352. திராய் - சன்னி போக்கும்
353. பேய்த்துமிட்டி - பாஷாணங்கட்டும்
354. பெருங்கம்பி - வெள்ளீய பற்பி
355. மரிதுடாரி - மால்தேவி பற்பி
356. (மறிதொடரி - மால்தேவி பற்பி)
357. தேவதாளி - சூத பற்பி
358. தாளி - இரைப்பு இருமல் மூர்ச்சை போக்கும்
359. நறுந்தாளி - சிலேட்டுமம் போம்
360. நாகதாளி - நாகங் கட்டும்
361. பேய்ச்சுரை - விஷம் போம்
362. பேய்ப்பீர்க்கு - கெந்தி தயிலம்
363. சற்பாக்ஷி - பாம்பு விஷம் போம்
364. பைசாசப் பீர்க்கு - விஷம் போம் பேதி
365. சுவசற் பாக்ஷி - இங்குலிகங் கட்டும்
366. விட்டுணு காந்தி - சுரங்கள் போம்
367. நாகபாலை - தாம்பர செந்தூரம்
368. நீர்க்கடம்பு - ஈயச் செந்தூரம்
369. ஈகை - தாளக செந்தூரம்
370. நறுவெளி - நாக்குப் புண்ணாறும்
371. புளிவஞ்சி - நாக ரஸம்
372. சிறுகல்லு - கல்லுப்பு கட்டு
373. வெட்புலா - உஷ்ணம் போம்
374. நீர்ப்புலா - போகமிக்காம்
375. தலைச்சூடு வள்ளி - ரசங் கட்டும்
376. பிரமதண்டி - சூதங் கட்டும்
377. பொடுதலை - வயிறுகடுப்புப் போம், வெட்டை போம், நீரொழுக்குப் போம்
378. கோடகசாலை - வயிறு புழுப்போம்
379. இடுகொள்ளு - சத்து ஆம்
380. காட்டுக்கொள்ளு - காரங் கட்டும்
381. நாட்டுக்கொள்ளு - சாரங் கட்டும்
382. கரும்பு - பசாசு போம்
383. தின்பு - சிலை கட்டு
384. துரும்பு - சூத பற்பி
385. முட்பலா - ஆண்மை
386. வன்மறை - அரிதார வெள்ளை
387. வெள்வேல் - விரணம் போக்கி
388. கருவேல் - பல்லிறுக்கி
389. காஞ்சிரம் - காயசித்தி
390. மலையத்தி - பேதி கட்டும்
391. சடைச்சி - விரியன் விஷம் போம்
392. கப்புச்சடைச்சி - கண்டர் வெள்ளை
393. தமனகம் - தம்பனை
394. சத்துகம் - உப்புக் கட்டு
395. மாஞ்சரோணி - கண் புகைச்சல் தீரும்
396. மூங்கிலரிசி - தோஷம் போம்
397. மூங்கில் குருத்து - ரத்தம் போம், வங்க வட்டை, வங்கபற்பி
398. செவ்விறகு - அயச் செம்பு
399. செம்மரம் - தங்கச் செம்பு
400. ஒருகொம்பு - ரஜிதச் செம்பு
401. நீர்விளா - பைத்தியம் போகும்
402. கழுதை மான் புள்ளி - வெள்ளீயங் கட்டும்
403. நெய்ம்மரம் - அரிதாரங் கட்டும்
404. பொன்வண்ணச்சாலி - தங்கமாம்
405. செழுமலர்க்கொன்றை - புழு நீக்கும்
406. பெருமலர்க்கொன்றை - கிருமி போக்கும்
407. ஓமை - தினவு போக்கும்
408. சிறுநிலக்கு - நரைகள் போம்
409. குறிதிமாறிக்கு - துரிசுச் செம்பு
410. புளிநறளை - திமிர் போக்கி
411. பேய்க் கும்மட்டி - லிங்கங் கட்டும்
412. சுண்டைக்காய் - சுரங்கள் போம்
413. காரெள்ளு - திலகமாம்
414. பித்தரோகணி - கண்டுறந்தி
415. நெல்லி - கெந்திச் செம்பு
416. சின்னக்கை - தைலத்தாதி
417. ஆவாரை - ஈயச் செந்தூரி
418. காட்டுக்கருணை - கெந்தி வெள்ளை
419. ருதந்தி - சிலை தைலம்
420. ஆதளைக் காய் - சூதஞ் சாம்
421. நரிமுருக்கு - க்ஷயம் போம்
422. கிளிமுருக்கு - அயச் செந்தூரம்
423. நெபத்திகை - காய சித்தி
424. மஞ்சிபத்திரம் - காந்தச் செம்பு
425. நாய்வேளை - மலங் கட்டும்
426. பச்சைநாவி - சூதங் கட்டும்
427. மாகாளி - மயக்கம் போம்
428. தாளிப்பனை - சலங்கள் போம்
429. விறுத்தி - சவுக்கார சுண்ணம்
430. ஓரிலைத்தாமரை - அழத்தி போம்
431. நீர் முள்ளி - வீக்கம் போம்
432. வெள்ளை நீர்முள்ளி - செம்பு குருவாகும்
433. நல்லாரை - சூதவெண்ணெ யிறுகும்
434. கசப்புப் பசளை - சூதங் கட்டும்
435. இருவேலி - தாபத்தைப் போக்கும்
436. பருத்தி - பெரும்பாடு போக்கும்
437. செம்பருத்தி - பித்தம் போம்
438. அகத்தி - வேக்காடு போம்
439. அரைக்கீரை - சுரம் போக்கும், கருவங்கபற்பி
440. கொடிதும்பை - சூதங் கட்டும்
441. வனமிட்டி - சாரங் கட்டும்
442. பூசனி - ஊறல் போக்கும், வசீகரி
443. கக்கரி - நீர் பெருக்கும்
444. கொம்மட்டி - வாதமாற்றும்
445. இரும்பிலி - கெந்தி தைலம்
446. முளகரணை - கிரந்தி போம்
447. அவிரிக்கு - லிங்கங் கட்டும், சகல விஷம்போம்
448. களவு தும்பை - மூலம் போக்கும்
449. பிறங்கு நாரி - வெடியுப்புக் கட்டும், பொட்டிலுப்பு கட்டும்
450. செங்கத்தாரி - அயச் செம்பி
451. காட்டுத்தி - கண்டர் வெளுப்பாம்
452. புல்லூரி - கருங்குட்டம் போம்
453. திலகம் - தொட்டிச் சிந்தூரம்
454. உச்சிச்சில் - குதிரைப் பல் கட்டும்
455. பாவட்டை - வாதம் போக்கும்
456. கொடிக் கொத்தான் - பாஷாணங் கட்டும்
457. ஒடமெட்டி - காயமுறுதி
458. செம்பரத்தை - சாதிலிங்க மைனம்
459. கொடிக்கள்ளி - பாஷாணக் கட்டு, நாகமணல், நாகபஸ்பம்
460. இலைக்கள்ளி - பாஷாணஞ் சாம்
461. திருகுகள்ளி - கெவுரி கட்டும்
462. மான்செவிக்கள்ளி - நாகபற்பி, தாளகந்தனை மெழுகு
463. மலை பொன்னாவாரை - வீர மெழுகு
464. பொன்னாவாரை - ஈய செந்தூரி
465. ஒதி - விரண மாற்றும்
466. புன்னை - விரண மாற்றும்
467. சுரபுன்னை - அரிதாரங் கட்டும்
468. நறும்பிசின் - நாகங் கட்டும்
469. சன்னை - சிலை கட்டும்
470. உகாய் - அப்பிரகஞ் சத்து
471. சிவப்பு நெல்லி - காயமுத்தும்
472. காட்டுவெந்தியம் - தாம்பர தங்க பற்பி
473. தூதுளை - கபநாசி, அறிவு விருத்தி
474. மஞ்சணாத்தி - உப்புக் கட்டி
475. கற்றாழை - வங்க சிந்தூரி
476. செங்கற்றாழை - சிந்தூரத் தாதி
477. கருங்காந்தள் - அறுத்த துண்ட மொன்றும்
478. முத்துப்பூடு - மிர்தபட்சி சீவிக்கும்
479. குளுந்த கொள்ளி - குக்குடாண்ட ஜனிதி
480. கருநாயுருவி - கர்ப்பார்த்த பிரஸவம்
481. கொடிவேலி - சீதபேதி கட்டும்
482. மேற்படி மூல தைலம் - லிங்கங் கட்டும்
483. செங் கொடி வேலி - செந்தூராதி
484. நாகக்கொட்டைத் தைலம் - நாகங் கட்டும்
485. துளசி - மேற்படி நாகத்தைச் சுன்னிக்கும்
No comments:
Post a Comment